சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த 20 மின்சார டபுள் டக்கர் பேருந்துகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் 1970களில் முதன்முதலில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், 1997லும் மீண்டும் அறிமுகமாகி, கடைசியாக 2008 ஆம் ஆண்டு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
தற்போது, மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் அசோக் லேலண்ட் நிறுவனம் இயக்கி வருவது போல, சென்னையிலும் தனியார் பங்களிப்புடன் இந்தச் சேவையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகம்
