சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 24ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
அக்டோபர் திங்களில், தென் கொரியாவின் புசான் நகரில் நாங்கள் இருவரும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம். இப்பேச்சுவார்த்தை முதல் இது வரை, சீன-அமெரிக்க உறவு ஒட்டுமொத்த அளவில் சீராக வளர்ந்து, இரு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த முன்னேற்றப் போக்கை இரு தரப்பும் நிலைநிறுத்த வேண்டும். மேலும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்று, சீன-அமெரிக்க உறவுக்கான புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கி, இரு நாடுகள் மற்றும் உலகின் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்றார்.
தைவான் பிரச்சினை குறித்த சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டை ஷிச்சின்பிங் உறுதிப்படுத்தினார். தைவான், தாய்நாட்டிற்குத் திரும்புவது, 2ஆவது உலக போருக்கு பிந்தைய சர்வதேச ஒழுங்கின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. சீனாவும் அமெரிக்காவும் பாசிசவாதம் மற்றும் இராணுவத்துவத்தைக் கூட்டாக எதிர்த்தன.
தற்போது, 2ஆவது உலக போர் வெற்றி பெற்றதற்கான சாதனைகளை இரு தரப்பும் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
டிரம்பு கூறுகையில்,
புசான் நகரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து மிகவும் மகிழச்சியடைகின்றேன். இரு நாட்டுறவு குறித்த உங்களுடைய கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றேன். 2ஆவது உலக போர் வெற்றி பெற்றதற்கு சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. தைவான் பிரச்சினை, சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து அமெரிக்கா புரிந்துகொள்கின்றது என்றார்.
