நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்வுகள் குறித்து தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த வாரம், படத்தின் தயாரிப்பு குழு படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கவிருப்பதாக அறிவித்தது.
அதோடு தளபதி திருவிழா என்ற பெயரில் விஜய்யின் ரசிகர்களுக்கான கொண்டாட்ட நிகழ்வையும் அறிவித்தது.
வரும் டிசம்பர் 27, விஜய்யின் சினிமா பயணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
சுமார் 1,00,000 ரசிகர்கள் வரை பங்கேற்க வாய்ப்புள்ளதால், இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்படலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியும் கசிந்துள்ளது.
விஜய்யின் ‘ஜன நாயகன்’ ட்ரைலர் வெளியாகும் நாள் இதுதானா?
