சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 4ஆம் நாள் பிற்பகல் அஸ்தானாவில் ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரைஸைச் சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது மனித குலம் முன்பு கண்டிராத வாய்ப்புகள் மற்றும் அறைகூவல்களைச் சந்தித்துள்ளது. ஐ.நா, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலக மேலாண்மையை முன்னேற்றுவதற்கான முக்கிய மேடையாகும். ஐ.நாவின் பங்கை வலுப்படுத்த வேண்டும். சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், உண்மையான பலதரப்புவாதத்தில் சீனா எப்போதும் ஊன்றி நின்று, சர்வதேச விவகாரத்தில் ஐ.நா முக்கிய பங்காற்றுவதை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டினார்.
குட்ரைஸ் கூறுகையில், ஐ.நாவின் இலட்சியத்தை ஆதரித்து, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு முக்கிய ஆக்கப்பூர்வ பங்காற்றி வருகின்ற சீனாவுக்கு நன்றி தெரிவித்தார். சீனாவுடன் மேலும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.