மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் ரூபாய் 100 கோடி மேல் வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைந்து காந்தா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதனை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்கியஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்ப்ரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் இன்று அவரது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காந்தா பட குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காந்தா படத்தின் டீசரையும் அப்பாடக்குழு வெளியிட்டுள்ளது.