எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

Estimated read time 0 min read

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை வளாகத்துக்கு இன்று வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ராஜினாமா குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,”இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்” என்று மட்டும் கூறி, அடுத்தகட்ட முடிவை நாளை அறிவிக்கவுள்ளதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி, கட்சி தலைமைக்கு காலக்கெடுவும் விதித்ததாக கூறப்படுகிறது.

You May Also Like

More From Author