சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகச் சர்ச்சை சம்பவம் குறித்து, நிபுணர்கள் குழுவை அமைப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் உலக வர்த்தக அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது பற்றி சீன வணிகத் துறை அமைச்சகத்தின் விதிமுறை சட்டப் பிரிவின் பொறுப்பாளர் 12ஆம் நாள் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு ஒழுங்கின்படி, இப்பிரச்சினையை உரிய முறையில் கையாண்டு, சட்டப்பூர்வமான சுய நலன்களைச் சீனா உறுதியாகப் பேணிக்காக்கும் என்று தெரிவித்தார்.
சீனா அறிவு சார் சொத்துரிமை பாதுக்காப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதோடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகள், இவ்வமைப்பில் சேர்ந்த போது வழங்கிய வாக்குறுதிகள் ஆகியவற்றைச் சீனா உறுதியுடன் பின்பற்றி வருகின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு சீனாவுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
