“ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணடிக்க முடியாது”- புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் ‘சாணக்கியர்’ என்று அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் (OPS) அணியில் நீண்ட காலம் ஆலோசகராகவும், அந்த அணியின் அரசியல் முகமாகவும் செயல்பட்டு வந்தார். 1977-ல் MGR-ன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவர், அண்ணாதுரை, ஜெயலலிதா, விஜயகாந்த், ஓபிஎஸ் ஆகியோருடன் பயணம் செய்தவராவார்

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் கருப்பு, வெள்ளை, சிகப்பு கலந்த மூவர்ண கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், “, தான் தொடங்கியுள்ள இந்த புதிய அமைப்பு தேர்தலுக்கானது அல்ல; மக்களுக்கானது.

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவிற்கும், தற்போதுள்ள அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஓ.பி.எஸ்ஸை முழுக்க முழுக்க ஒன்றுமே இல்லாமல் செய்தது அந்த கட்சி தான்.. நம்ப வைத்து கெடுத்து விட்டது. நம்பக்கூடாதவர்களை நம்பியதன் விளைவு தான் ஓபிஎஸ் இப்படி இருக்கிறார். ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணடிக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்கானது. தனி ஒருவருக்கானது அல்ல, எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குகிறேன். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடாது” என்றார்.

You May Also Like

More From Author