சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய கமிட்டி வெளிவிவகார அலுவலகத் தலைவருமான வாங் யீ, நவம்பர் 27ம் நாள் அழைப்பை ஏற்று, பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் பொன்னேவுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
வாங் யீ அப்போது கூறுகையில், பதற்றமான சர்வதேச நிலைமையில், இரு நாட்டுத் தலைவர்களின் தலைமை, மிக முக்கியமானது. இரு தரப்பும், ஒன்றுக்கொன்று நலன் தரும் பன்முக ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை புதிய கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
பொன்னே கூறுகையில், சீன பயணம் குறித்து பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் எதிர்பார்ப்பு தெரிவித்தார். பிரான்ஸ்-சீன உறவு மற்றும் ஐரோப்பிய-சீன உறவை முன்னெடுப்பது, உலகளாவிய நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிப்பது ஆகியவை குறித்து மாக்ரொன் சீனாவுடன் பரிமாற்றம் செய்யவுள்ளார். இப்பயணம், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குத் தலைமை வகித்து, உலக அமைதி மற்றும் நிதானத்துக்குப் புதிய பங்கு ஆற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
