அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. உலகின் 44 நாடுகளைச் சேர்ந்த 32 ஆயிரத்து 266 பேர் இதில் கலந்து கொண்டனர்.
சீனாவின் தனிச்சிறப்பான தூதாண்மை சிந்தனை மற்றும் நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர்கள், சர்வதேச நிர்வாகம் மற்றும் மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்கை அமைப்பதில் சீனாவின் மேலதிக பங்கு மீது எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்பட்ட சீனா மீதான நல்லெண்ண கருத்து கணிப்பில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
சீனா, வெற்றியடைந்த ஒரு நாடாகும் என்று 89 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். 77.8 விழுக்காட்டினர்களின் கருத்தில், சீனா, மதிக்கத்தக்க நாடாகும் என்று கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.