பிற நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு சர்வதேச சமூகத்தின் கண்டனம்

அரசுரிமை கொண்ட நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்து, பிற நாட்டின் அரசுத் தலைவரைக் கட்டுப்படுத்துவது, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் கோட்பாட்டுக்கு புறம்பான மிருகத்தனமான செயல். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கா ஆதிக்கத்தின் மூலம், வெனிசூலா நாட்டின் அரசுரிமையை காலில் போட்டு மிதிப்பதற்கு 93 விழுக்காட்டினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கை மீண்டும் தொடங்கியதற்கு 91.7 விழுக்காட்டினர் ஆழமாக கவலைப்படுத்தினர்.

நீண்டகாலமாக, அமெரிக்கா தனது விருப்பத்தை பிற நாடுகளின் மீது  திணித்து வருகிறது. இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த 92.8 விழுக்காட்டினர் தெரிவிக்கையில், வெனிசூலா மீது அமெரிக்கா ஆயுத ஆற்றலைப் பயன்படுத்துவது, வெனிசூலாவின் அரசுரிமை பாதுகாப்பைக் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்றனர். அமெரிக்கா நிபந்தனையின்றி வெனிசூலா அரசுத் தலைவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று 86.3 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வெனிசூலா மீது பெருமளவிலான இராணுவத் தாக்குதல் தொடுத்ததற்குப் பிறகு, அந்நாட்டின் உள் விவகாரங்களை அமெரிக்கா கட்டுப்படுத்துவதோடு, அமெரிக்காவின் எண்ணெய் தொழில் நிறுவனங்கள் வெனிசூலாவில் முதலீடு செய்து பொருளாதார நலன்களைப் பெறுவதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து, எண்ணெய் மூலவளங்களைச் சூறையாடுவது தான், அமெரிக்காவின் உண்மையான நோக்கமாகும் என்று 94.3 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

மேலும், லத்தின் அமெரிக்கா மற்றும் கரீப்பீயன் பிரதேசத்திலுள்ள மேலதிக நாடுகள், வெனிசூலாவைப் போல் அபாயமான நிலைமையில் இருக்கக்கூடும் என்று 86.6 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர்.

 

 

You May Also Like

More From Author