மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
மாணவர்களின் கவனம் மனப்பாடம் செய்தலிலிருந்து கருத்துப் புரிதலுக்கு (conceptual understanding) மாற வேண்டும் என்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இதன்மூலம் மாணவர்கள் திறம்படப் பாடங்களைப் புரிந்துகொள்வதுடன், பகுப்பாய்வு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 பரிந்துரைகளுடன் சீரமைத்து, 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுத் தாள் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
2026 முதல், கேள்வித்தாள்களில் 50 சதவீதம் வரை திறன் சார்ந்த (Competency-Based) கேள்விகள் இடம்பெறும்.
மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா… 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம்
