வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி பற்றிய மன்றக்கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி பற்றிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2025ஆம் ஆண்டு மன்றக்கூட்டம் மே 20ஆம் நாள் ஷான்ஷி மாநிலத்தின் ஷிஅன் நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், வறுமை ஒழிப்பு, உலகளாவிய பிரச்சினை மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளின் கூட்டு இலக்காகும். கடந்த சில ஆண்டுகளாக, வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சி பற்றிய ஒத்துழைப்புகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆக்கமுடன் மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பு தலைமை நாடான சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தி, வறுமை ஒழிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், மேலதிக நாடுகள் தங்களது சொந்த நிலைமைகளுக்குப் பொருந்திய தொடரவல்ல வளர்ச்சிப் பாதையை கண்டறிய உதவி செய்து, கூட்டுச் செழிப்பு கொண்ட இனிமையான உலகத்தைக் கட்டியமைக்கவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.