உலகின் காலநிலை மாற்றச் சமாளிப்பில் சீனாவின் பங்கு
இவ்வாண்டு, காலநிலை மாற்றச் சமாளிப்புக்கான பாரிஸ் உடன்படிக்கை எட்டப்பட்ட 10வது ஆண்டு நிறைவும் மற்றும் பல்வேறு நாடுகள் புதிய சுற்று பங்களிப்பை சமர்ப்பிக்கும் நேரமாகும். இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலகின் 48 நாடுகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் மக்களுக்கு இணைய வழி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவின்படி, உலக காலநிலை மாற்றச் சமாளிப்பில் சீனாவின் சிந்தனையும் சாதனைகளும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் பயன் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, காலநிலை மாற்றங்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலநிலை மாற்றங்களைச் சமாளிக்க, சர்வதேச சமூகத்தின் நடைமுறை நடவடிக்கைகள் அவசியமானவை என்று 90 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
