சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் புதின் ஆகிய இருவரின் நெடுநோக்கு வழிக்காட்டலில், சீன-ரஷிய உறவு இன்னல்களைச் சமாளித்து, உயர் நிலையில் பரந்தளவிலான உயர்தர வளர்ச்சியை நனவாக்கியுள்ளது என்றார். மேலும், இவ்விரு நாடுகளும் தத்தமது நாட்டில் நடத்திய உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாடத்தில் இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் மாறி மாறி பங்கெடுத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆழமாகப் பரிமாற்றம் மேற்கொண்டு தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தை வகுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
லாவ்ரோவ் கூறுகையில், இவ்வாண்டில், இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எதிர் தரப்பு நாட்டில் பயணம் மேற்கொண்டு, ரஷிய-சீன உறவுக்கான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்குப் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளனர் என்றார். மேலும் ஒரே சீனா எனும் கொள்கையில் ரஷியா எப்போதும் ஊன்றி நின்று வருவதாகக் குறிப்பிட்ட அவர் தைவான் பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா உறுதியாக ஆதரவளிக்கும் என்றார்.
