சீனாவுக்கான புரிந்துணர்வு சர்வதேச கூட்டம் நவம்பர் 30ஆம் நாள் முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை, சீனாவின் குவாங் ச்சோ நகரில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இத்தாலிய முன்னாள் தலைமை அமைச்சர் ப்ரோடி சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டியளித்த போது கூறுகையில்,
கடந்த சில ஆண்டுகளில், சீனா நிறைய முன்னேற்றங்களை பெற்றுள்ளது. பொருளியலாளராக நான் முன்பு இதை எதிர்பார்க்கவில்லை. சீனாவின் ஆக்க தொழில் திறனும், உற்பத்தி பயனும் புகழ் பெற்றன. உயர் தொழில் நுட்ப துறையும் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனாவின் தொழிற்துறை அமைப்பு முறை பரந்தளவாக உள்ளது. பல்வறு ஆக்க தொழிற்துறைகள் ஒன்றிணைந்துள்ளன. இது மிக தனிச்சிறப்பானது என்றார்.
