சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு ஆகிய இருவரும் மாஸ்கோவில் டிசம்பர் 2ஆம் நாள் சீன-ரஷிய நெடுநோக்குப் பாதுகாப்புக்கான 20ஆவது கலந்தாய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
இரு நாடுகளின் நெடுநோக்குப் பாதுகாப்புத் தன்மை சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் பன்முகங்களிலும் ஆழமாகவும் பரிமாற்றம் மேற்கொண்டு புதிய ஒத்த கருத்துக்களை எட்டி, கூட்டு நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தினர். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் நெடுநோக்குப் பாதுகாப்புத் துறை குறித்து கூறியுள்ள ஒத்த கருத்துக்களை முயற்சியுடன் நடைமுறைப்படுத்தி, இரு தரப்புகளின் நெடுநோக்கு ஒத்துழைப்பை உயர் தர வளர்ச்சிப் போக்கில் நடைபோடுவதைத் தூண்ட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
வாங்யீ கூறுகையில்,
இவ்வாண்டில், சீன-ரஷிய உறவு உயர் நிலை வளர்ச்சியை இரு தரப்பும் நனவாக்கி, உயர் நிலை பரிமாற்றத்தைக் கூட்டாக நடத்தியுள்ளன. புதிய அச்சுறுத்தல் மற்றும் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, உலகின் நியாயம், நீதி, அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.
ஷோய்கு கூறுகையில், ரஷிய-சீன நெடுநோக்குக் கூட்டாளியுறவு முன்கண்டிராத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது, இரு நாடுகளின் நலன்களுக்குப் பொருந்தியது. மேலும், இது, பிராந்திய மற்றும் உலகின் அமைதிக்கும் துணை புரியும். ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில், வெளிப்புறத் தலையீடுகளைப் பொருட்படுத்தாமல் இரு தரப்புறவை வளர்க்க வேண்டும். ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நின்று, தைவான், சிச்சாங், சின்ஜியாங், ஹாங்காங் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரித்து, இரு தரப்புகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
