ஷிச்சின்பிங் எழுதிய சீனாவின் ஆட்சிமுறை எனும் நூலுக்கான சீன-கென்யா வாசகர்கள் கூட்டம், உள்ளூர் நேரப்படி, டிசம்பர் 1ஆம் நாள், கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெற்றது. இதில் சீனா மற்றும் கென்யாவின் பல்வேறு துறையைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தற்போதைய சீனாவின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கை அந்நாட்டின் பல்வேறு துறை சார்ந்த வாசகர்கள் அறிந்துகொள்வதற்கு இந்நூல் துணை புரியும். அதோடு, இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் அதிகரிக்கவும் இந்நூல் விரைவுபடுத்தும் என்று அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் எண்ணியல் பொருளாதார துறை அமைச்சர் கபோகோகிடா தெரிவித்தார்.
