இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார்.
போர்கோ எக்னாசியாவின் சொகுசு விடுதியில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் 12 நாடுகளும் ஐந்து சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டன.
ஒரு வருடத்திற்கு முன், புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கடுமையான கவலைகளை மோடி தெரிவித்தார்.
அதன்பிறகு, கனடா-இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் சிதைந்தன.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கு பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேற்று நேருக்கு நேர் சந்தித்தனர்.
G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்
