தமிழகத்தில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் ஆதார விலையை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 மற்றும் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545 வழங்கப்படும்.
இந்த முடிவால் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நெல் கொள்முதல் விலையை உயர்த்தியிருப்பது விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.