ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: சிஇஓ உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்!  

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ’யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
ஏஐ ஆனது அறுவை சிகிச்சை நிபுணர்கள், கோடிங் வல்லுநர்கள் மட்டுமின்றி, தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓக்கள்) உட்பட யாருக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ரஸ்ஸல், ஏஐ அமைப்புகள் தற்போது நாம் செய்யும் கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் செய்யும் திறன் கொண்டவை என்று கூறினார்.
உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும் அறுவை சிகிச்சை போன்ற பணிகள்கூட விரைவான ஆட்டோமேஷனைச் சந்திக்கும் என்று அவர் நம்புகிறார்.

You May Also Like

More From Author