சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

Estimated read time 0 min read

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சாத்துார், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், பாஜ, வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த இரு தினங்களாக பிரசாரம் செய்தார்.

பிரதமர் மோடி, 15ம் தேதி நாகர்கோவிலிலும், வரும் 18ம் தேதி கோவையிலும் பிரசாரம் செய்ய உள்ளார். இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவும், தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். வரும் 19ம் தேதி சென்னை வரும் அமித் ஷா, ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராஜசிம்ஹா மஹிந்திரா அஸ்வின்குமாரையும் மயிலாப்பூரில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசையையும் ஆதரித்து, பிரசாரம் செய்கிறார்.

You May Also Like

More From Author