நீட் தேர்வு விண்ணப்பம் : கால அவகாசம் நீட்டிப்பு!

நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 9ஆம் தேதி இரவுடன் நிறைவு பெற இருந்தது.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author