ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில்: 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author