எல்லை பகுதியில் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அண்மையில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது மீண்டும் உச்சமடைந்துள்ளது.
இரு நாடுகளும் ஒருவரையொருவர் போர்நிறுத்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி வருகின்றன. தாய்லாந்து ராணுவம், கம்போடியா “தெளிவான அச்சுறுத்தல்களை” ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளது.
அதேசமயம், கம்போடியா தரப்பு, தாய்லாந்து படைகளே முதலில் தாக்குதலை தொடங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பிலும் பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக News18 செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளுடன் பேசி சமரசம் செய்ததாக கூறிய நிலையில் தற்போது மீண்டும் போர் வெடித்துள்ளது.
மீண்டும் துவங்கிய தாய்லாந்து – கம்போடியா எல்லை போர்!
