STR 50: முதன்முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்கும் சிம்பு  

Estimated read time 1 min read

“STR 50” என்பது சிலம்பரசனின் 50வது படமாகும். இதை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார்.
இப்படம், சிலம்பரசன் தனது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி ஆர்ட்ஸின் கீழ் தயாரிக்கிறார். இது அவரின் முதல் தயாரிப்பாகும்.
இது ஆரம்பத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் STR 48 ஆகக் கருதப்பட்டது. ஆனால், அப்படம் கைவிடப்படவே, அதை சிம்பு கையிலெடுத்துள்ளார்.
இந்த படம் ஒரு காலமுறை அதிரடி திரில்லர் ஆகும். இதில் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.
ஆனால் இப்படத்தில் அவர் ஒரு திருநங்கை வேடத்தில், அதுவும் ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
‘தக் லைஃப்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது இந்த தகவல் வெளியானது.

You May Also Like

More From Author