தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
இந்த முக்கியச் சாலை இனி டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று அழைக்கப்பட உள்ளது. மாநில அரசு இந்த முடிவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்கத் தூதரகத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க உள்ளது.
உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களின் பெயர்களை ஹைதராபாத்தில் உள்ள முக்கியச் சாலைகளுக்குச் சூட்டுவதன் மூலம் தெலுங்கானாவை இந்தியாவின் கண்டுபிடிப்புகளின் அடையாளமாக நிலைநிறுத்த திட்டமிட்டு முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த முன்முயற்சியை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் வைப்பு
