உலக பிரசித்தி பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
https://youtu.be/xAuW86IR590?si=ujidPw8Dvl4WcdPF
பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாகக் காஞ்சி ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் திகழ்கிறது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்தக் கோவிலில் 29 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதன்படி இன்று அதிகாலை ஐந்து 45 மணிக்குச் சிவச்சாரியர்களின் வேத, மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்குப் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நமச்சிவாய, நமச்சிவாய என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினார்கள்.
