ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் துணைப் பிரதிநிதி சுன்லெய் 8ஆம் நாள், 80ஆவது ஐ.நா பொது பேரவைக் கூட்டத்தொடரில், கடல் மற்றும் கடல் சட்டம் குறித்து உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தென் சீன கடல் பற்றி, குறிப்பிட்ட ஒரு சில நாடுகள் வெளியிட்ட தவறான கூற்றுகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தென் சீன கடலின் தீவுகள் மற்றும் அருகிலான கடல் பரப்புக்கான சீனாவின் இறையாண்மை சந்தேகத்திற்கிடமின்ற தெளிவாக உள்ளது. தொடர்புடைய கடல் பரப்பு மீதான அரசுரிமை மற்றும் அதிகார உரிமை சீனாவுக்கு உள்ளது. ஏராளமான வரலாறு மற்றும் சட்ட சான்றுகள் உள்ளன என்றார்.
தென் சீன கடலில் தற்போதைய நிலைமை பெருமளவில் நிதானமாக உள்ளது. மாறாக, இப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து வலுப்படுத்தி, சர்ச்சைகளையும் வேறுபாடுகளையும் தீவிரமாக்குவது, இப்பகுதியின் மிகப் பெரிய அறைகூவலாகும் என்றார்.
