
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதன்படி ஈரோட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. முதலில் தமிழக வெற்றிக்கழகப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என சர்ச்சை எழுந்த நிலையில் பின்னர் நீண்ட இழுபறிக்கி பிறகு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல் தலைவர் தனலட்சுமி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, நடிகர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு வைப்புத் தொகையாக 50,000 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். அதன் பிறகு பிரச்சாரம் செய்ய அனுமதி கட்டணமாக 50,000 செலுத்த வேண்டும் என கூறியுள்ளோம். மேலும் ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நாங்கள் கூறி இருந்த நிலையில் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததோடு பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து தருவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர் என்றார்.
