தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பாஜக சார்பில் வாக்காளர் சிறப்பு திருத்தச் சட்டமன்ற தொகுதிக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில், பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு தலைவர் நயினார் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் குறித்து ஆலோசனைகளை நயினார் பாலாஜி வழங்கினார். இந்தக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
