சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

Estimated read time 0 min read

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழக பணியாளர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் வழங்கவில்லை என்றால் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர்.

இதனை அடுத்து, பேராசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்களுக்கு நாளை சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author