கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?  

Estimated read time 1 min read

கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர்.
இது குறித்து உடனடியாக வனத்துறை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பறவையின் முதுகில் இருந்த கருவியை ஆய்வு செய்தபோது, அது சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் ஒரு ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
GPS தரவுகளின்படி, இந்தப் பறவை ஆர்க்டிக் பகுதிகள் உட்பட சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கார்வார் கடற்கரைக்கு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பறவை பிடிபட்ட இடம் இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்பு மையமான INS கடம்பா கடற்படைத் தளத்திற்கு மிக அருகில் உள்ளது.

You May Also Like

More From Author