தைவானின் தலைவர் லே ஜிங்தெவின் மீதான பதவி நீக்கப் பணி துவங்கியது என்று 19ஆம் நாள் தை பெய் நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன கோ மி தாங் கட்சியும், மின் ச்சுங் தாங் கட்சியும் அறிவித்தன. அண்மையில் தைவான் பொது மக்கள் கருத்து நிறுவனம் அங்கீகரித்த நிதி வரவு செலவு பிரிவினை சட்டத்தை வெளியிடுவதை லே ஜிங்தெ மறுத்து தைவானின் பல்வேறு துறையினர்களின் எதிர்ப்புக்குள்ளாகினார்.
சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று இந்த செய்தியாளர் கூட்டத்தில் இரு கட்சியின் பிரதிநிதிகள் கூச்சலிட்டனர். கோ மின் தாங் கட்சியின் பிரதிநிதி ஃபு குங்ஜீ கூறுகையில்,
லே ஜிங்தெ பதவி ஏற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில், தைவானின் ஜனநாயகம், பொது மக்களின் சுதந்திரம், தைவானின் சொத்துக்கள் ஆகியவை தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றது என்றார்.
