உலகப் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பெயர் பட்டியலில் சீன வசந்த விழா

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கடைப்பிடிக்கப்படும் வசந்தவிழா, யுனெஸ்கோவின் மனிதகுல மரபுசாரா பண்பாட்டு செல்வத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் டிசம்பர் 4ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளது.

பராகுவேயில் டிசம்பர் 2 முதல் 7ஆம் தேதி வரை மரபுசாரா பண்பாட்டு செல்வத்தின் பாதுகாப்புக்காக அரசுகளுக்கு இடையிலான குழுவின் 19ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில்தான் இம்முடிவு எடுக்கப்பட்டது.

பாரம்பரிய சீனப் புத்தாண்டின் துவக்கத்தை வசந்த விழா குறிக்கிறது. குடும்பங்கள் ஒன்றிணைவு, பாரம்பரிய அறிவுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல், அதிர்ஷ்டம் வேண்டி இறை வேண்டல் செய்தல் உள்ளிட்ட சமூக நடைமுறைகள் இவ்விழாவின்போது கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக யுனெஸ்கோ தெரிவித்தது.

தவிரவும், திருவிழா தொடர்பான கைவினைத்திறன் மற்றும் கலை திறன்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருவதாகவும், குடும்ப மதிப்புகள், சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை இவ்விழா மேம்படுத்துவதுடன் கலாச்சார அடையாளத்தை மக்களிடையே வழங்குவதாகவும் யுனெஸ்கோவின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, யுனெஸ்கோவின் பண்பாட்டு மரபுசாரா செல்வப்பட்டியலில் 44 கலாசாராக் கூறுகள் அல்லது நடைமுறைகளை சீனா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author