பாரிஸ் ஒலிம்பிக் : நாளை 9-ஆம் நாள் ..! இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன?

Estimated read time 1 min read

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியின் நாளைய 9-வது நாளில் இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம். அதற்கு முன் இன்றைய நாளில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் விளையாடினார்.

அதில் பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 4-ஆம் இடம் பிடித்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் மேற்கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

இதனால் இந்த போட்டியிலும் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கலாம். தற்போது இந்திய அணியின் நாளைய போட்டிகளை பற்றி பார்க்கலாம்.

இந்திய அணியின் நாளைய போட்டிகள் :

துப்பாக்கி சுடுதல் :

நாளை மதியம் 12:30 மணிக்கு ஆண்களுக்கான தனிப்பிரிவில் 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் தகுதி சுற்றானது நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் சார்பாக விஜய்வீர் சித்து, அனிஷ் அனிஷ் விளையாடியது.

ஹாக்கி :

நாளை மதியம் 1:30 மணிக்கு இந்தியா ஆண்கள் அணிக்கான காலிறுதி போட்டியானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

தடகள போட்டிகள் :

நாளை மதியம் 1:30 மணிக்கு பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பாக பருல் சௌத்ரி விளையாடவுள்ளார்.
நாளை மதியம் 2:30 மணிக்கு ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றானது நடைபெற உள்ளது. இதில் இந்தியா அணியின் சார்பாக ஜெஸ்வின் ஆல்ட்ரின் கலந்து கொண்டு விளையாடவுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author