வந்தவாசியில் நல்நூலகர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா..!

Estimated read time 0 min read

வந்தவாசி, டிச 22:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக அரசின் டாக்டர் எஸ்.அரங்கநாதன்(நல்நூலகர்) விருது பெற்ற ஜா.தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முகமது அப்துல்லா, வந்தை பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் இரா.பாஸ்கரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் பங்கேற்று, நூலக வாசிப்பின் அவசியம் பற்றியும், தமிழக அரசின் நல்நூலகர் விருது பெற்ற ஜா. தமீம் அவர்களை பாராட்டியும் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்வில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் க.வாசு, ஆ.முரளி, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் வே.சிவராமகிருஷ்ணன், எக்ஸ்னோரா கிளை தலைவர் சு.தனசேகரன், ரோட்டரி சங்கத் தலைவர் ஷாஜகான், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, தென்னாங்கூர் அரசு கல்லூரி பேராசிரியர் உ.பிரபாகரன், ரோட்டரி கிளப் வீரராகவன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டணி மாவட்ட தலைவர் டி.சாந்தி, கோல்டு லீப் எக்ஸ்னோரா நிர்வாகி கேப்டன் பிரபாகரன், தலைமை ஆசிரியை சாயிராபிஷேக், நல்லாசிரியர்கள் ம. ரகுபாரதி, முபாரக், கலைஞர் முத்தமிழ் சங்கம் வந்தை குமரன், ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய நிர்வாகி கு.சதானந்தன், ஆசிரியர் மஹாவீர், தோழர் ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, தென்னாங்கூர் ரஜினியின் பாரதியார் பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்வை கோட்டை தமிழ் சங்க துணைத் தலைவர் பா.சீனிவாசன் தொகுத்து வழங்கினார். நல்நூலகர் ஜா.தமீம் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதியில் சங்கத் துணைத் தலைவர் எ.தேவா நன்றி கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author