சீனாவுடன் தூதாண்மை உறவைக் கொண்டுள்ள அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையில் நெடுநோக்கு உறவு:ஷிச்சின்பிங்
செப்டம்பர் 5ஆம் நாள் 2024ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சிமாநாடு பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு, நவீனமயமாக்கத்தைக் கைகோர்த்துக்கொண்டு முன்னேற்றி, மனித குலத்தின் பொது எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், ஏறக்குறைய கடந்த 70 ஆண்டு காலமாக சீன-ஆப்பிரிக்க உறவு வரலாற்றின் சிறந்த காலகட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தை நோக்கி, சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ள அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை நெடுநோக்கு உறவு நிலைக்கு சீனா உயர்த்தும் எனக் குறிப்பிட்ட அவர், சீன-ஆப்பிரிக்கா உறவின் ஒட்டுமொத்த நிலை புதிய யுகத்தில் எல்லாக் காலங்களிலும் சீன-ஆப்பிரிக்காவின் பொது எதிர்காலச் சமூகமாக உயர்த்தபபடும் என்றும் கூறினார்.