கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.
பத்தனம்திட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி உட்புற விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது இந்த சம்பவம் நடந்தது.
ஹெலிபேட் முழுமையாக அமைக்கப்படாததால், சக்கரங்கள் ஈரமான கான்கிரீட்டில் சிக்கியது.
மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் திட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பிறகு, ஹெலிபேட் கடைசி நிமிடத்தில் போடப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்து தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்
