2025ஆம் ஆண்டுக்கான தங்க பாண்டா சர்வதேச பண்பாட்டு கருத்தரங்கு செப்டம்பர் 13ஆம் நாள் சீனாவின் செங்டு நகரில் துவங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ சூலெய் துவக்க விழாவில் பங்கெடுத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கூறுகையில், கூட்டு அறைக்கூவல்களைச் சமாளிப்பதற்கும், இனிமையான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கும், பண்பாட்டு மற்றும் நாகரிகத்தின் ஆற்றல் தேவைப்படுகின்றது.
கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பண்பாட்டு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பன்னாட்டு பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், பல்வேறு நாட்டு மக்களிடையே பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் பரஸ்பர புரிதலை சிறப்பாக மேம்படுத்தவும் வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.