சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ரிலீஸ் தேதியில் மாற்றம்: பொங்கல் ரேஸில் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுகிறது  

Estimated read time 1 min read

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
அதில் ஒன்று விஜயின் ‘ஜனநாயகன்’. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியான அதிகாரப்பூரவ அறிவிப்பின் படி, இந்த படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘பராசக்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் ஜனவரி 14-ஆம் தேதி (பொங்கல் அன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘பராசக்தி’, தற்போது நான்கு நாட்களுக்கு முன்னதாகவே, வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author