சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி

சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி
இவ்வாண்டில், சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களில் சீன வாகனங்களின் ஏற்றுமதித் தொகை, முந்தைய ஆண்டை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தாக சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி வரை, சீன வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, 8 இலட்சத்து 22 ஆயிரத்தை எட்டியது. இது, முந்தை ஆண்டை விட 30.5 விழுக்காடு அதிகமாகும். அவற்றில் 1 இலட்சத்து 82 ஆயிரம் புதிய எரிசக்தி வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் அதிகரிப்பு விகிதம் 7.5 விழுக்காடு.
தொழில்நுட்பப் புத்தாக்கம், செலவுக் கட்டுப்பாடு, சந்தை அமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் சீனாவின் வாகனத் தொழில் படிப்படியாக சர்வதேச சந்தையில் வலுவான போட்டித்தன்மையைக் காட்டி வருகின்றது என்று இச்சங்கம் கூறியது.
2024ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியுடன்,
வாகனங்களின் ஏற்றுமதி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றது. அதன் அதிகரிப்பு வேகம் சுமார் 20 விழுக்காடு இருக்கும் என்று இச்சங்கத்தின் துணை தலைமைப் பொறியியலாளர் சூ ஹை டாங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author