அமெரிக்காவில் விமான விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலி..!!

Estimated read time 0 min read

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், விஸ்கான்சின் டெல்ஸ் அருகே நேற்று காட்டுப் பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரபல சுற்றுலா தலமான விஸ்கான்சின் டெல்ஸ் அருகில் உள்ள மிரர் லேக் ஸ்டேட் பார்க் அருகில் உள்ள வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்து சேருவதாகவும், இதனால் விமானத்தை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் தகவல் அளித்ததையடுத்து, விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

You May Also Like

More From Author