நட்பார்ந்த பரிமாற்றத்துக்கான 2026ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி 14ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், மனிதகுலத்திற்கான பொது எதிர்காலச் சமூகத்தையும் நான்கு உலகளாவிய முன்மொழிவுகளையும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்திருப்பது மேலும் சிறந்த உலகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும், உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தவும், பரிமாற்றங்களை வலுப்படுத்தவும், பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களுடன் இணைந்து பணியாற்ற சீனத் தேசிய மக்கள் பேரவை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உயர்நிலை திறப்புக் கொள்கையை விரிவுபடுத்தவும், அனைத்து நாடுகளுடன் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சீனா தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
