33ஆவது உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் குளிர்கால விளையாட்டு போட்டி, 2027ஆம் ஆண்டின் ஜனவரி 15ஆம் நாள் தொடங்கவுள்ளது. இது தொடர்பில் சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 14ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இதன் ஏற்பாட்டு நிலைமை குறித்து விளக்கப்பட்டது. அக்டோபர் 12ஆம் நாள் வரை, 63 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 3716 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துகொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர். இது, இப்போட்டியின் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
இதனிடையில் அக்டோபர் 8ஆம் நாள், இவ்விளையாட்டுப் போட்டியின் சுடர் ஏற்றும் விழா இத்தாலியில் வெற்றிகரமாக நடைபெற்றது. அது போன்றே 14ஆம் நாள் முற்பகல், சாங்சுன் நகரம் சுடர் வரவேற்பு விழாவை நடத்தியது.
இது வரை, இப்போட்டிக்கான பல்வேறு ஏற்பாட்டுப் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
