மயிலிறகின் முத்தம்.

‘மயிலிறகின் முத்தம்’
நூல் ஆசிரியர் : ஆரிசன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி –
604 408. விலை: ரூ. 40.

வந்தவாசி என்ற ஊருக்கு ஹைக்கூ கவிதைகளால்

புகழ் சேர்த்து வருபவர் இருவர். ஒருவர் கவிஞர் மு.முருகேஸ் மற்றொருவர் கவிஞர் ஆரிசன்.

பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. இவரதுபெயர் போலவே இவரது ஹைக்கூ கவிதைகளும் மிக வித்தியாசமானவை. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி வருபவர், நல்ல

சிந்தனையாளர் , சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் சந்தித்த போது இந்த நூலைவழங்கினார்.

புள்ளிப்பூக்கள் என்ற ஹைக்கூ

நூல் தந்து இன்றும் தொடர்ந்து

எழுதி வரும் படைப்பாளி. மகிழுந்து விபத்தில்மகளையும்,

மருமகனையும் இழந்து தானும் தன் மனைவியும் காயமுற்று சோகத்தில் நிலைகுலையாத கவிஞர்அமுதபாரதி

அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியது சிறப்பு.

கவிஞர் வைரமுத்துவின் ஆசிரியர் பேராசிரியர் முனைவர் இராம.

குருனாதன் அவர்களின் ஆய்வுரை

மிகநன்று. ஹைக்கூ கவிதைகளின் முன்னோடி பேராசிரியர் மித்ரா அவர்களின் அனிந்துரை அற்புதம்.

எழுதுங்கள்.எழுதுகிறேன்.எழுதுவோம் என்று எழுதிக்கொண்டே இருக்கும் எழுத்துத்தேனீ கவிஞர்

பொன் குமார் அவர்களின்அணிந்துரை அழகுரை.

இவரது ஹைக்கூ கவிதைகளை பிரசுரம் செய்து சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள் . வித்தியாசமாக சிந்திக்கிறார்

என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ஹைக்கூ.

வற்றாத ஜீவ நதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நாக்கு!

இதற்கு முன் வேறு யாரும்

இந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை என்று உறுதி கூறலாம்.

தகவல் தொடர்பில் ஊழல் என்பது உலகம் அறிந்த ஒன்று.

இந்தியாவிற்கு தலைகுனிவுத்தரும் ஒன்று. அதனை எள்ளல் சுவையுடன் சாடி உள்ளார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல பறவைகளைப் பாரட்டி ஊழல்அரசியல்வாதிகளுக்கு கண்டனத்தையும் காட்டும் ஹைக்கூ

தகவல் தொடர்பு

ஊழலின்றி செய்தது
பறவையினம்!

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் போல காட்சிப்படுத்தும்

நுட்பமான ஹைக்கூ வடிவில் நிறைய ஹைக்கூ

கவிதைகள் இருந்த போதும் பதச்சொராக ஒன்று .

மீசை சுழற்றி
மகிழ்ச்சி தெரிவித்தது
கரப்ப்பான் பூச்சி !

இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர் மனதிற்கு கரப்பான் பூச்சி நினைவில் வந்து போகும் என்று

உறுதி கூறமுடியும். இது தான்

படைப்பாளியின் வெற்றி. ஹைக்கூவின் வெற்றி.

குழந்தைகள்

விளையாடும் போது பொம்மைகளை

படாதபாடு படுத்தும். பொம்மைக்கு வாய் இருந்தால்அழுது விடும் என்பார்கள். இந்த நிகழ்வை உற்று நோக்கி வடித்த ஹைக்கூ.

குழந்தைகள் விளையாட்டு
சலிப்பின்றி ஒத்துழைக்கிறது
பொம்மை !

குழந்தையின் உச்சரிப்பில் பிழை இருந்தாலும் கேட்க

இனிமை. உலகப்பொதுமறை வடித்த

திருவள்ளுவரின் திருக்குறளை வழி

மொழிந்து குழந்தைகளின் மொழியைப் பாராட்டிய ஹைக்கூ.

இளநீர் சுவை
பருகிய உனர்வு
மழலைப் பேச்சு !

தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயற்சி செய்ய

வேண்டும் என்ற கருத்தை குழந்தையின் நடையோடு ஒப்பிட்டு படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக வடித்த ஹைக்கூ.

எட்டி நடக்கிறது
விழுந்து எழுகிறது
ஊக்கத்தோடு !

புகழ்பெற்ற வரிகளில் சில

மாற்றம் செய்து ஹைக்கூ வடிக்கும்

போது அந்த ஹைக்கூ வாசகர் மனதில் எளிதாகப் பதிந்து விடும்.

நம்நாட்டில் ஆட்சி மாறுகின்றது . ஆனால் காட்சி மாறுவதே இல்லை அரசியல்வாதிகள் என்றும் திருந்துவதேஇல்லை. சுயநலத்தின் மொத்த உருவமாகவே வலம் வருகிறார்கள்

என்பதை உனர்த்திடும் ஹைக்கூ.

பாரத தேசம்
பழம்பெரும் தேசம்
ஊழல் பெருச்சாளிகள் !

தனியார் பள்ளிகளில் பகல் கொள்ளை நடக்கின்றது. தெரிந்தே சென்று பணம் கட்டி ஏமாந்து வருகின்றனர் . பெற்றோர்கள் அதனை உணர்த்தும் ஹைக்கூ.

கட்டணம் இல்லை
போராட்டமில்லை
அரசு ஆரம்பக்கல்வி !

அறிவியல் மேதை மாமனிதர் அப்துல் கலாம் ஆரம்ப கல்வி அரசுப்பள்ளியில் தான் என்பதை உணர வேண்டும். கவிஞர் ஆரிசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author