5ஆவது சீனத் தொல் பொருள் ஆராய்ச்சி மாநாடு அக்டோபர் 15ஆம் நாள் ஷான்சி மாநிலத்தின் யுன்சேங் நகரில் துவங்கியது. தொல் பொருள் ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் எதிர்காலம் என்ற தலைப்பில் அக்டோபர் 17ஆம் நாள் வரை தொடரும் இம்மாநாட்டில், துவக்க விழா, சிறப்புரை, 28 குழு விவாதங்கள் ஆகியவை நடத்தப்பட்டு, 570க்கும் மேற்பட்ட கல்வியல் அறிக்கைகளும், 22 பொது சொற்பொழிவுகளும் வழங்கப்பட உள்ளன.
2016ஆம் ஆண்டில் சீனத் தொல் பொருள் ஆராய்ச்சி மாநாடு முதன்முறையாக நிறுவப்பட்டதிலிருந்து தற்போது வரை 4 முறைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. சீனத் தொல் பொருள் ஆராய்ச்சியின் நிலவரம் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவது, தொல் பொருள் ஆராய்ச்சியின் வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சர்வதேசக் கல்வியியல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது, சீனத் தொல் பொருள் ஆராய்ச்சியின் பன்முக வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
