சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய “மேலும் உயரமான வரையறைகள் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளின் மூலம் கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதைப் பன்முகங்களிலும் வலுப்படுத்துவது” என்ற தலைப்பிலான முக்கிய கட்டுரை அக்டோபர் 16ஆம் நாள் ச்சியூஷி இதழில் வெளியிடப்படவுள்ளது.
இக்கட்டுரையில், கட்சி மத்தியக் கமிட்டியின் முக்கிய கொள்கைகள் மற்றும் பணி ஏற்பாடுகளை மேலும் உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்றும், மேலும் அறிவியல் பூர்வமாகவும் பயன்தரும் முறையிலும், அமைப்புமுறைகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும், ஊழல் ஒழிப்புப் பணியை மேலும் தெளிந்த சிந்தனையுடனும் உறுதியுடனும் முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
