சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் குறித்த தீர்மானம், 27ஆம் நாள் நடைபெற்ற 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 19ஆவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் படி, சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் 2026ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் குறித்த தீர்மானம், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 45ஆவது தலைமை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தொடர் 2026ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.
