சீனாவின் தைவானுக்கு அமெரிக்கா பெரிய அளவிலான ஆயுதங்களை விற்பனை செய்ய உள்ளது.
1100 கோடி டாலருக்கு மேல் மதிப்புள்ள இந்த ஆயுத விற்பனை திட்டத்தில், பல தாக்குதல் தன்மை வாய்ந்த ஆயுதங்கள் இடம்பெறுகின்றன. தைவான் நீரிணை நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தில் கவனம் மற்றும் பொது கவலை ஏற்பட்டுள்ளன.
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலகளாவிய இணைய பயன்பாட்டாளர்களுக்கு மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவில், தைவானில் ஆயுதமேந்திய செயல், தைவான் மக்களை போர் விளிம்பில் தள்ளி வருகிறது என்று 90 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.
தைவான் அரசாங்கம், குறுகிய கால அரசியல் நலன்களுக்காக, தைவானின் நீண்டகால நலன்களைப் பலிகொடுத்து, இப்பிரதேசத்தின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி எதிர்காலத்தைக் கைவிட்டுள்ளது என்று 81.1 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர். தைவான் அரசாங்கத்தின் செயல், தைவான் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று 87.7 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.
